பிக்பாஸ் தர்ஷன் நடிக்கும் நாடு
நவ 16, 2023
Advertisement
இலங்கையை சேர்ந்தவரான தர்ஷன் அங்கு புகழ்பெற்ற மாடலாக இருந்தார். "மிஸ்டர்.ஸ்ரீலங்கன்" பட்டத்தையும் வென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டில் பிரபலமானார். கூகுள் குட்டப்பா படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்தார். இந்த நிலையில் அவர் தற்போது "நாடு" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சரவணன். ஶ்ரீ ஆர்ச் மீடியா சார்பில் சக்கரா மற்றும் ராஜ் தயாரித்துள்ளனர். சத்யா இசை அமைத்துள்ளர். சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். தர்ஷன் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சரவணன் கூறும்போது, “மலைவாழ் மக்களின் வலியையும், வாழ்வியலையும் நகைச்சுவையாக சொல்லும் படம். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி உள்ளது. மலைவாழ் மக்களின் வாழ்வையும், அடிப்படைத் தேவைகளுக்குகூட அவர்கள் எப்படிப்பட்ட சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்ற எதார்த்தத்தையும் சொல்லும் படம். முழுக்க முழுக்க கொல்லிமலை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது” என்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!