
காமெடி நடிகரிடம் 17 லட்சம் மோசடி : போலீசில் புகார்
டேனியலிடம் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வாடகைக்கு வீடு தருவதாக கூறி 17 லட்சம் மோசடி செய்துள்ளது. பெங்களூரை சேர்ந்த அந்த நிறுவனத்தின் மீது டேனியல் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:
“இணைய தளத்தில் வாடகைக்கு வீடு தேடினேன். அப்போது ஒரு நிறுவனம் தங்களிடம் 17 லட்சம் கட்டினால் வீடு பார்த்து தருவதாக தெரிவித்தது. மாதா மாதம் தாங்களே வாடகையை செலுத்தி விடுவதாகவும் இரண்டு வருடங்களுக்கு பிறகு முதலீட்டு தொகையை திருப்பி தந்து விடுவதாகவும் தெரிவித்தனர். அதை நம்பி 17 லட்சம் கொடுத்து போரூரில் உள்ள ஒரு வீட்டுக்கு வாடகைக்கு சென்றேன். அந்த வீட்டில் குடியேறிய 3 மாதங்களுக்கு பிறகு வீட்டு உரிமையாளர் வந்து வாடகை தரவில்லை என்று சொல்லி வீட்டை காலிசெய்யும்படி கூறினார். அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். பெங்களூரை சேர்ந்த அந்த நிறுவனம் இப்படி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருக்கிறேன்"" என்று வீடியோவில் பேசியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!