
என்4 : சின்னத்திரை நடிகைகளின் பெரிய திரை
இருவருமே டிக்டாக் புகழ் மூலம் சின்னத்திரைக்கு வந்து அதன் வழியாக இப்போது பெரிய திரைக்கு வந்திருக்கிறார்கள். இவர்களுடன் மைக்கேல் தங்கதுரை, அபிஷேக் சங்கர், அனுபமா குமார், வடிவுக்கரசி, அழகு உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் லோகேஷ் குமார் கூறியதாவது: காசிமேடு பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் குறியீட்டு எண்தான் என்4. அந்த பகுதியில் நடக்கும் கதை என்பதால் இந்த டைட்டிலை வைத்துள்ளோம். இந்த பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வியலை சொல்லும் படமாக உருவாகிறது. இதில் கேப்ரில்லாவும், வினுஷா தேவியும் மீனவ பெண்களாக நடித்திருக்கிறார்கள். ஒருவர் செய்யும் தவறு மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!