ஹாலிவுட் வெப் தொடரில் தபு
மே 15, 2024
பாலிவுட்டின் முன்னணி நடிகை தபு. தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 52 வயதிலும் தற்போதும் இளமையாக நடித்து வருகிறார். கடைசியாக "கிரீவ்" படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். கடந்த 2021ம் ஆண்டு வெளிவந்த "டூன்" படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் டூன்: புரோப்ஹசி என்ற தொடரில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். டூன் படம் உலகத்திற்கு வெளியே கிரகங்களில் நடக்கிற மாதிரியான கதை. இதன் முதல் பாகம் ஏராளமான ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இது வெப் தொடராகவும் தயாராகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!