சுவாசிகாவிற்கு லேசான காயம்
மார் 05, 2025
Advertisement
தமிழில் வைகை, கோரிப்பாளையம் போன்ற படங்களில் நடித்தவர் சுவாசிகா. சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட இவருக்கு கடந்தாண்டு வெளிவந்த ‛லப்பர் பந்து" படம் தான் புகழ் வெளிச்சம் தந்தது. இதுதவிர மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45வது படம் மற்றும் சூரியின் மாமன் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார். இவற்றில் மாமன் படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க, சூரி நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் சண்டைக்காட்சி படமானபோது இடது கையில் சுவாசிகாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயத்திற்கான சிகிச்சை எடுத்த பின் மீண்டும் படப்பிடிப்பில் தொடர்ந்து அவர் பங்கேற்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!