
சூர்யா 43 படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்குகிறது
பிப் 25, 2024
Advertisement
சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா, தற்போது தனக்கான டப்பிங்கை பேசி வருகிறார். இதை அடுத்து சுதா இயக்கும் தனது 43 வது படத்தில் அடுத்த மாதம் முதல் நடிக்கப் போகிறார். சூர்யாவுடன் நஸ்ரியா, துல்கர் சல்மான் ஆகியோரும் நடிக்க உள்ளனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மார்ச் 1ம் தேதி முதல் மதுரையில் தொடங்க உள்ளது. அதன் பிறகு திருச்சி, சிதம்பரம் பகுதிகளில் நடைபெறுவதோடு ஹரியானா மாநிலத்தில் உள்ள ரேவாரி என்ற பகுதியில் நான்காம்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டு இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவருக்கு நூறாவது படமாகும்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!