
ரிலீஸிற்கு தயாராகும் சுமோ திரைப்படம்
ஜன 23, 2024
எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், வி.டி.வி. கணேஷ், யோகி பாபு ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் "சுமோ". வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும் படமாக உருவாகியுள்ளது. கடந்த 2020ல் ரிலீஸ்க்கு தயாரான இந்த படம் சில பிரச்னைகளால் மூன்று வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது இதன் ரிலீஸிற்கான பணிகள் தொடங்கி உள்ளன. தற்போது கிடைத்த தகவலின் படி, சுமோ படத்தை வருகின்ற ஏப்ரல் 5ம் தேதி திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!