டிசம்பர் மாதத்தில் துவங்கும் ஸ்பிரிட்
ஜூலை 14, 2024
Advertisement
அர்ஜுன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பிரபாஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு "ஸ்பிரிட்" என தலைப்பு வைத்துள்ளதாக சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்திருந்தார். இதில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். முழுக்க முழுக்க ஆக் ஷன் கதையில் தயாராகிறது. பிரபாஸின் 25வது படமாக உருவாகும் இதன் பட்ஜெட் மட்டும் ரூ. 300 கோடி என கூறப்படுகிறது.
இதில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பை வருகின்ற இவ்வருட டிசம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!