
இலவசமாக நடிக்கவில்லை : ரச்சிதாவுக்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்
இதற்கிடையில் பயர் படத்தில் நடித்ததற்கு தனக்கு சம்பளமே தரவில்லை என்று பாலாஜி முருகதாஸ் பதிவிட, ரச்சிதாவும் அதை ஆமோதித்து பதிவிட்டிருந்தார். ரச்சிதா தனது பதிவில் பயர் படத்தை ஷிட் என்று கூறியதோடு ஜே.சதீஷ் குமாரையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து அதற்கு தற்போது பதிலளித்த தயாரிப்பாளர், "நீங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் நடித்துள்ளீர்கள். இலவசமாக நடிக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் அக்ரிமெண்ட் அனைத்தும் உள்ளது. பயர் படத்தில் நீங்களும் நடித்துள்ளீர்கள். இப்போது அதே படத்தை ஷிட் என்று விமர்சனம் செய்கிறீர்கள். அந்த ஷிட்டில் தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்" என்று காத்திரமாக கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!