சூது கவ்வும் 2ம் பாகம் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு
மார் 18, 2024
Advertisement
கடந்த 2013ல் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக ஆன படம் "சூது கவ்வும்". இதில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன்,பாபி சிம்ஹா,சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.
தற்போது சூது கவ்வும் 2ம் பாகத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த பாகத்தை எம் எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இவர் இயக்கிய முதல் படமான "யங் மங் சங்" இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கின்றார். சத்யராஜ், கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு பல கட்டமாக சென்னை நகரை சுற்றி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகின்ற மார்ச் 22ம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!