
குட் நைட் நாயகி மீதா ரகுநாத் திருமணம்
இரண்டு படங்களில் மட்டுமே நடித்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். ஊட்டியைச் சேர்ந்த மீதாவுக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து மீதா, “எனது மொத்த இதயம்” எனப் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் பலரும் மீதாவுக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். நடித்தது இரண்டு படங்கள் என்றாலும் இரண்டிலுமே அவரது நடிப்பைப் பலரும் பாராட்டினார்கள். திருமணத்திற்குப் பிறகும் மீதா நடிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!