ஒரே படத்தில் அறிமுகமாகும் சின்னத்திரை நடிகைகள்
நவ 23, 2024
Advertisement
நவரச கலைக்கூடம் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‛நெஞ்சு பொறுக்குதில்லையே". இந்த படத்தில் அன்பே வா, பாவம் கணேசன், சில்லுனு ஒரு காதல் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த அரவிந்த் ரியோ மற்றும் காளிதாஸ் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள்.
நாயகிகளாக "கனா காணும் காலங்கள்" தொடரில் நடித்த புவனேஸ்வரி ரமேஷ் பாபு மற்றும் சூரியவம்சம், என்றென்றும் புன்னகை, எங்க வீட்டு மீனாட்சி போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த நித்யாராஜ் இருவரும் அறிமுகமாகிறார்கள். மற்றும் ஜேஷன் கௌசி, சசிகுமார் உட்பட பலர் நடித்துள்ளார்கள். பாடல்களுக்கு எம்.எல்.சுதர்சன் இசை அமைக்கிறார், ஜெயகுமார் பின்னணி இசை அமைக்கிறார், அப்துல் கே.ரகுமான் ஒளிப்பதிவு செய்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருவர் என்ற புனைப் பெயரில் பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள். படம் பற்றி இயக்குனர்கள் கூறும்போது “வீட்டை விட்டு வெளியேறும் காதலர்கள் சந்திக்கும் பிரச்சனையை மையமாக வைத்து சமுகத்தில் நடக்கும் அவலங்களையும், இன்று இளைஞர்களின் மனநிலையையும் வெளிப்படுத்தும் ஒரு சமுக சிந்தனை உள்ள திரைப்படம் இது. படப்பிடிப்பு முழுவதும் கேரளா மாநிலத்தின் புனலூர், உப்புகுளி உள்ளிட்ட இயற்கை எழில் நிறைந்த மலைப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது” என்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!