
25 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரவீனா டாண்டன்
2001ல் வெளிவந்த "டமான்" படத்திற்காக சிறந்த நடிகைகக்கான தேசிய விருதையும் பெற்றவர் ரவீனா.
1994ல் அர்ஜுன் நாயகனகா நடித்து வெளிவந்த "சாது" படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் தோல்வியடைந்தது. அதற்குப் பின் தமிழில் 2001ல் வெளிவந்த கமல்ஹாசன் நடித்த "ஆளவந்தான்" படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.
அதற்குப் பின் கடந்த 25 வருடங்களாக எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. நேற்று வெளியான "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடித்துள்ளார். படத்தின் நாயகன் சூர்யாவுக்கு தக்க சமயத்தில் ஆலோசனை சொல்லும் அவரது காட்சி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!