ராம் இன் லீலா படத் தலைப்புக்குத் தணிக்கை சிக்கல் ?
ஆக 15, 2026
Advertisement
ராமசந்திரன் கண்ணன் இயக்கத்தில், ரியோ, வர்டிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "ராம் இன் லீலா". இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
கல்யாணம் செய்து கொள்வதற்காகப் பல பெண்களைத் தேடுகிறார் ராம். ஆனால், எதுவுமே நிச்சயமாகவில்லை. இதனிடையே, லீலா என்ற ஒரு பெண்ணைப் பார்த்து காதல் கொள்கிறார் ராம். ஆனால், மாலை 6 மணிக்கு மேல் லீலா என்னவாகிறார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. இதுதான் டிரைலரில் சொல்லப்பட்டுள்ள விஷயம்.
படத்தைத் தணிக்கை செய்ய அனுப்பியுள்ளார்கள். ஆனால், படத்தின் தலைப்பில் "ராம்" என்ற பெயர் இருப்பதால் அதை அனுமதிக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்களாம். இதற்கு முன்பும் அதே பெயரில் வந்த படங்களை அனுமதித்துள்ள போது தங்கள் படத்தை அனுமதிக்க மறுப்பது ஏன் என படக்குழு கேட்டார்களாம். ஆனால், அவர்கள் கறாராக அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.
தற்போது படத்திற்கு வேறு என்ன தலைப்பை வைக்கலாம் என படக்குழு ஆலோசித்து வருகிறது எனத் தகவல்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!