7 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய திரையில் தோன்றும் ஷெரின்
ஜூலை 23, 2024
Advertisement
தனுஷின் முதல் ஹீரோயின் ஷெரின். துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த இவர் அதன்பிறகு பல படங்களில் நடித்தார். திடீரென வாய்ப்புகள் குறையவே சொந்த ஊரான பெங்களூருக்கே திரும்பினார். கடைசியாக "நண்பேன்டா" படத்தில் நடித்தார். அதன்பிறகு பிக் பாஸ், மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தற்போது அவர் நடித்துள்ள "தில் ராஜா" படம் விரைவில் வெளியாகிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு ஷெரின் திரையில் தோன்ற இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சத்யா நாயகனாக நடித்திருக்கிறார். ஏ.வெங்கடேஷ் இயக்கி உள்ளார். படத்திற்கு முதலில் "ரஜினி" என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே "தில் ராஜா" என்று மாற்றப்பட்டுள்ளது.
ஷெரின் கூறும்போது, “நண்பேண்டா படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எதற்கும் ஒரு நேரம் வரவேண்டும் என்று காத்திருந்தபோது வந்த படம் இது. இந்த படம் எனக்கு அடுத்த ரவுண்டை உருவாக்கித் தருமா என்பது ரசிகர்கள் கையில் உள்ளது” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!