
மீண்டும் ராம் சரணை இயக்கும் ஷங்கர்
ஆக 02, 2023
Advertisement
கமல் நடிப்பில் ‛இந்தியன் 2" படத்தையும், ராம் சரண் நடிப்பில் ‛கேம் சேஞ்சர்" படத்தையும் இயக்கி வருகிறார் ஷங்கர். இரண்டு படங்களுமே இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த இரண்டு படங்களும் திரைக்கு வந்ததும், மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை தழுவி தனது அடுத்த படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது கேம் சேஞ்சர் படத்தை முடித்துவிட்டு மீண்டும் ராம் சரணை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை முடித்த பிறகு தான் வேள்பாரி நாவலை தழுவி உருவாகும் படத்தை மூன்று பாகங்களாக பிரமாண்டமான பட்ஜெட்டில் இயக்குவதற்கு ஷங்கர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!