
அஜித்தின் டேர் டெவில் படப்பிடிப்பு இன்று ஆரம்பம்
இப்படத்தின் பூஜை கடந்த வாரம் நவம்பர் 6ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் அஜித் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பின்தான் அவர் துபாயிலிருந்து சென்னை திரும்பினார்.
இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ஆரம்பமாகி இருக்கிறது. தொடர்ந்து அங்கேயே படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம். அஜித் படங்களின் படப்பிடிப்பு வழக்கமாக அங்குதான் அதிகம் நடக்கும்.
அஜித் நடித்து கடைசியாக கடந்த ஆண்டு "குட் பேட் அக்லி" படம் வெளிவந்தது. அதற்குப் பிறகு அவர் கார் ரேஸில் பிஸியாக இருந்தார். அதனால், இந்த வருடம் அஜித் நடித்த எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. "டேர் டெவில்" படம் அடுத்த வருட பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…