
திருப்பதி ரீல் பார்த்திருக்கீங்களா ?
கேமரா மூலம் நேரடியாக ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்தால் அதை அப்படியே கம்ப்யூட்டரில் பொருத்தி ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சியைப் பார்க்கலாம். சினிமா என்றாலே பிலிம் தான் என்பது கடந்த பத்து வருடங்களில் இப்படி மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இப்போதெல்லாம் பிலிம் வடிவில் உள்ள பல திரைப்படங்களை டிஜிட்டலுக்கு மாற்றிவிட்டார்கள். அதனால் நெகட்டிவ்களையும், பிலிம்களையும் சேகரித்து வைப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனால், பாரம்பரிய படத் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் உள்ளிட்ட சிலர் அவர்களது படங்களை பிலிமிலும் சேகரித்து வைத்துள்ளார்கள்.
அப்படி ஏவிஎம் நிறுவனம் தயாரித்த அஜித், சதா நடித்து வெளிவந்த "திருப்பதி" படத்தின் பிலிம் ரீலை அந்நிறுவனத்தின் வாரிசான அருணா குகன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அப்போதெல்லாம் படத்தின் நீளத்திற்கு ஏற்ப ஒவ்வொரு தியேட்டருக்கும் இது போன்று ரீல்கள் அனுப்பப்படும். பெரிய படமாக இருந்தால் 500 பிரிண்ட் எல்லாம் போடுவார்கள். இத்தலைமுறை சினிமா ரசிகர்கள் இது போன்ற பிரிண்ட்டுகளை இனி மியுசியத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
https://twitter.com/arunaguhan_/status/1686604272769900544






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!