
டிரைலர், டீசர், க்ளிம்ப்ஸ், பிரிவியூ வரிசையில் ஷோகேஸ்
சாட்டிலைட் டிவிக்கள் வந்த பிறகு அந்த டிரைலர்களை டிவி சேனல்கள் ஒளிபரப்ப ஆரம்பித்தன. டிரைலர்களை வீடியோ முன்னோட்டம் என தமிழில் குறிப்பிடுவார்கள். டிரைலர்களைத் தவிர்த்து சிறிய முன்னோட்டமாக டீசர் என்ற ஒன்று பின்னர் அறிமுகமானது. கடந்த சில வருடங்களில் டிரைலர்கள், டீசர்கள் தான் அதிகமாக மாறி மாறி வர ஆரம்பித்தன.
சமீபமாக "க்ளிம்ப்ஸ்" என ஒன்றை அறிமுகம் செய்தார்கள். சமீபத்தில் சூர்யா நடித்து வரும் "கங்குவா" படத்திற்கு "க்ளிம்ப்ஸ்" வெளியானது. ஷாரூக்கான், நயன்தாரா நடிக்கும் ஹிந்திப் படமான "ஜவான்" படத்திற்கு "பிரிவியூ" என்ற பெயரில் ஒரு வீடியோ முன்னோட்டத்தை வெளியிட்டார்கள். அடுத்து "ஷோகேஸ்" என புதிதாக ஒன்றை ஆரம்பிக்கிறார்கள்.
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர்" படத்திற்கு இன்று மாலை 6 மணிக்கு "ஷோகேஸ்" வெளியாகிறதாம். அதில் என்ன இருக்கப் போகிறது என்பதற்கு இன்னும் சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். இனி, படத்திற்குப் படம் புதிதாக ஏதாவது ஒரு பெயரில் வீடியோ வெளியிடுவது டிரென்ட் ஆக மாறிவிடும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!