
மீண்டும் இயக்கத்திற்குத் திரும்பிய இருட்டு அறை இயக்குனர்
அவர் அடுத்து இயக்க உள்ள படத்தில் பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் நடிக்க உள்ளார்கள். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியது.
கடந்த வாரம் டிவியில் நேரடியாக வெளியான "வெள்ளை யானை" படத்தைத் தயாரித்தவரும், தற்போது விஷால், ஆர்யா நடிக்கும் "எனிமி" படத்தைத் தயாரிப்பவருமான வினோத் குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படம் பற்றி தனது சமூக வலைத்தளத்தில் பூஜை புகைப்படங்களுடன் பதிவிட்டு, “பின்குறிப்பு - இந்தப் படம் ஒரு ஆக்ஷன் என்டர்டெயினர்” எனக் குறிப்பிட்டுள்ளார். தான் ஆபாசப்படம் எடுக்கவில்லை என்பதை ரசிர்களுக்குப் புரிய வேண்டும் என தனியாகக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!