முத்துமணி பாடலுக்கும் வரவேற்பு
ஆக 29, 2026
Advertisement
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடித்து வரும் படம் ‛டோரதி". இளையராஜா இசையமைக்கிறார். கடந்தவாரம் இந்த படத்திலிருந்து ‛கல்யாண விருந்து" என்ற முதல்பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக 80ஸ் களின் ராஜா இன்று 2கே கிட்ஸ்களின் ராஜாவாக இசை விருந்து தந்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டினர்.
இந்நிலையில் ‛முத்துமணி" என்ற 2வது பாடலை வெளியிட்டுள்ளனர். இதை இளையராஜா இசையமைத்து, பாடல் எழுதி, பாடியிருக்கிறார். அவருடன் ஸ்வேதா மோகனும் பாடி உள்ளார். இந்த பாடலையும் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். பாடல் வெளியான 5 மணிநேரத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் யுடியூப்பில் கிடைத்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!