
தாமதமாகும் பென்ஸ் : தாடி எடுக்க முடியாத விரக்தியில் நிவின்பாலி
இப்படத்தில் இவரது காட்சிகள் இன்னும் 30 சதவீதத்திற்கு மேல் படமாக்கப்பட வேண்டி இருக்கிறதாம். ஆனால், மீண்டும் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என தெரியாமல் பல மாதங்களாக இருப்பதாகவும், இந்த பேட்டியை பார்த்துவிட்டு இது குறித்து தனக்கு யாராவது தகவல் தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்றும் நகைச்சுவை கலந்த விரக்தியுடன் கூறியுள்ளார் நிவின்பாலி.
மேலும், இப்படத்திற்காக தாடி வளர்ப்பதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் "பென்ஸ்" படத்திற்கு கூப்பிடுவார்கள் என்பதால் தான் மலையாளத்தில் நடிக்கும் அனைத்து படங்களிலும் தாடியுடன் தான் நடிக்க வேண்டி இருக்கிறது என்கிற தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் நிவின்பாலி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!