
அன்பே டயானா முதல் மைக்கேல் ஜாக்சன் பயோபிக் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்...!
பார்ட் - டைம்ர்ஸ் (Part - Timers)
தெலுங்கு இயக்குநர் சம்பத் குமார் தோட்டா இயக்கத்தில் தனுஜா புட்டஸ்வாமி மற்றும் ஞானேஸ்வரி கண்ட்ரேகுலா நடித்துள்ள வெப் தொடர் "பார்ட் - டைம்ர்ஸ் (Part - Timers)". இந்த தொடர் நாளை (ஆக.,28ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
அன்பே டயானா
பாரி இளவழகன் இயக்கி நாயகனாக நடித்த படம் " அன்பே டயானா". இதில் ரம்யா ரங்கநாதன், சேத்தன், கோபி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் நாளை (ஆக.28ம் தேதி) சோனி லைவ்வில் வெளியாகவுள்ளது.
நியூட்டன் 3வது விதி (Newton"s 3rd Law)
தெலுங்கு இயக்குநர் ராஜேஷ் கர்ணா இயக்கத்தில், நடிகர்கள் சுமந்த், ஜகபதி பாபு, ஸ்ரீனிவாஸ் அவசரலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் "நியூட்டன் 3வது விதி (Newton"s 3rd Law)". இந்த படம் இன்று(ஆக.27ம் தேதி) ஈடிவிண் தளத்தில் வெளியாகியுள்ளது.
ப்ளூட்டோ (Pluto)
மலையாள இயக்குநர் ஆதித்யன் சந்திரசேகர் இயக்கத்தில் நீரஜ் மாதவ், அல்தாப் சலீம், ஆர்ஷா சாந்தினி பைஜு மற்றும் அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் "ப்ளூட்டோ (Pluto)". இந்த படம் கடந்த 24ம் தேதி Saina playவில் வெளியாகியுள்ளது.
ஐ நோபடி (I Nobody )
மலையாள இயக்குநர் நிஸாம் பஷீர் இயக்கத்தில், பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து, விஜயராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "ஐ நோபடி (I Nobody)". ஜியோ ஹாட் ஸ்டாரில் கடந்த 25ம் தேதி வெளியாகியுள்ளது.
சும்பக்
அதீஷ் கபாடியா இயக்கத்தில் சுமீத் வியாஸ், நீனா குப்தா, தேவன் போஜானி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் " சும்பக்". இந்த படம் நாளை (ஆக.28ம் தேதி) நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
மைக்கேல்
மறைந்த பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு படமான "மைக்கேல்" ஆகஸ்ட் 29ம் தேதி ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
பந்தர்
பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான திரைப்படம் "பந்தர்". இந்த படம் நாளை (ஆக.28ம் தேதி) ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!