
டூப் போடாமல் சண்டைக்காட்சியில் நடிக்கும் சம்யுக்தா
பிப் 05, 2026
களரி, ஜூலை காற்றில், வாத்தி போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை சம்யுக்தா. தற்போது விஜய் சேதுபதியுடன் 33 டெம்பிள் ரோடு, லாரன்ஸ் உடன் பென்ஸ் மற்றும் தி பிளாக் கோல்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் தெலுங்கில் கதையின் நாயகியாக அவர் நடித்து வரும் தி பிளாக் கோல்ட் என்ற படத்தில் அதிரடியான ஆக் ஷன் ரோலில் நடிக்கிறார் சம்யுக்தா. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அவரது உடம்பில் காயங்கள் ஏற்பட்ட போதும்கூட எந்தவித டூப்பும் பயன்படுத்தாமல் ரிஸ்க்கான காட்சிகளிலும் தானே நடித்து வருகிறாராம். இந்த படத்தை யோகேஷ் கேஎம்சி என்பவர் இயக்குகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!