மீண்டும் புதிய சாதனை படைத்துள்ள ரவுடி பேபி
ஜூலை 09, 2021
Advertisement
பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்த படம் "மாரி 2". அப்படத்தில் இடம் பெற்ற "ரவுடி பேபி" பாடல் யு-டியுபில் 2019 ஜனவரி 2ம் தேதி வெளியானது.
வெளியான நாளிலிருந்தே தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வந்த அப்பாடல் தற்போது மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. யு-டியூபில் 5 மில்லியன் லைக்குகளை தற்போது பெற்றுள்ளது.
தென்னிந்திய அளவில் வெளியான திரைப்படப் பாடல்களில் யு-டியூபில் அதிக பார்வைகளைப் பெற்ற ஒரே பாடல் இதுதான். தற்போது 1186 மில்லியன் பார்வைகளுடன் உள்ள இப்பாடல் விரைவில் 1200 மில்லியன் சாதனையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் ஏற்கெனவே பல திரைப்படப் பாடல்கள் 5 மில்லியன் லைக்ஸ் சாதனையைப் படைத்துள்ளன. ஆனால், தென்னிந்தியத் திரைப்படப் பாடல் ஒன்று 5 மில்லியன் சாதனையைப் படைப்பது இதுவே முதல் முறை.
"ரவுடி பேபி" பாடல் சாதனையை முறியடிக்கும் விதத்தில் யார் சூப்பர் ஹிட் பாடலை எதிர்காலத்தில் கொடுக்கப் போகிறார்களோ தெரியாது ?.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!