
2026 டிசம்பர் வரை சென்ற வெளியீடு அறிவிப்புகள்
அடுத்த வாரம் அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ள நிலையில் அந்த மாதத்திலும் அதற்கடுத்து இந்த ஆண்டின் எஞ்சியுள்ள இரண்டு மாதங்களிலும் வெளியாகும் சில படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் முதல் வாரம் வரையிலான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அக்டோபர் 1ம் தேதி "பத்தா, மிஸ்டர் பாரத், ஏழு கடல் ஏழு மலை," அக்டோபர் 2ம் தேதி "அன்பில் அவன், சிக்மா", அக்டோபர் 15ம் தேதி "ஜெயிலர் 2", அக்டோபர் 16ல் "அப்பா குட்டி", அக்டோபர் 23ல் "இரண்டு வானம்", நவம்பர் 6ம் தேதி "மூக்குத்தி அம்மன் 2, சீன்", நவம்பர் மாத வெளியீடாக "மூன் வாக்", டிசம்பர் 24ம் தேதி "ராவடி" ஆகிய படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 16ல் வெளியாவதாக அறிவித்து பின் தள்ளி வைக்கப்பட்ட தனுஷ் நடித்த "ஓம்", விஜய் சேதுபதியின் மேலும் இரண்டு படங்களான "டிரைன், ஸ்லம்டாக் 33, டெம்பிள் ரோடு", விக்ரமின் "துருவ நட்சத்திரம்", அருள்நிதியின் "டிமாண்டி காலனி 3", சசிகுமார் நடித்துள்ள "ப்ரீடம்", ரவி மோகன் நடித்துள்ள "கராத்தே பாபு", கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள "சத்தியவான் சாவித்ரி", ஆர்யா நடித்துள்ள "வேட்டுவம்", உள்ளிட்ட படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அடுத்தடுத்து அறிவிக்கப்படலாம். இவற்றில் சில படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு பின்னர் வெளியாகாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் வரை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படங்களின் வெளியீடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50 படங்களுக்கும் அதிகமாக அடுத்த மூன்று மாதங்களில் வெளியாகலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!