ஹிந்தியில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த புஷ்பா 2
டிச 21, 2024
Advertisement
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த தெலுங்குப் படம் "புஷ்பா 2". இப்படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது.
வெளியான நாள் முதலே நல்ல வசூலைக் குவித்து வரும் இப்படம் கடந்த இரண்டு வாரங்களில் பல வசூல் சாதனைகளைப் படைத்துள்ளது. தற்போது ஹிந்தியில் அதிக "நிகர" வசூலைக் குவித்துள்ள படம் என்ற புதிய சாதனையைப் புரிந்துள்ளது. ஹிந்தி பாக்ஸ் ஆபீஸில் 632 கோடி வசூலித்து அந்த சாதனையைப் புரிந்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், உலக அளவில் மொத்தமாக 1508 கோடியை வசூலித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள். இனி வரும் நாட்கள் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்கள் என்பதால் "புஷ்பா 2" வசூல் மேலும் அதிகாரிக்க வாய்ப்புள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!