
சீனாவில் பாகுபலி 2 வசூலை மிஞ்சிய மகாராஜா
அங்கு இதுவரையில் 10 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 86 கோடி ரூபாய் மதிப்பு. விரைவில் அந்த வசூல் 100 கோடியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளிவந்த "பாகுபலி 2" படம் சீனாவில் வெளியாகி மொத்தமாக 80 கோடியை மட்டுமே வசூலித்தது. தற்போது அந்த வசூல் சாதனையை "மகாராஜா" படம் முறியடித்துள்ளது.
தமிழ் நடிகர்களின் படங்கள் சீனாவில் வெளியாகி சில கோடிகள் மட்டுமே வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள வசூல் நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரை விடவும் விஜய் சேதுபதி சீனாவில் முதன் முதலில் ஒரு வசூல் சாதனையைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!