
சொந்த ஊரையே பிலிம் சிட்டியாக மாற்ற விரும்பும் ரிஷப் ஷெட்டி
பெரும்பாலும் ரிஷப் ஷெட்டிக்கு தனது சொந்த ஊரான உடுப்பி தாலுகாவில் உள்ள கெரடி கிராமத்தில் தன்னுடைய படங்களின் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என ரொம்பவே விருப்பம் இருந்தது. பலமுறை லொகேஷன்கள் பார்த்தாலும் அது கைகூடாமல் போனது. அதே சமயம் காந்தாரா படத்தில் தனது சொந்த ஊரில் உள்ள வனப்பகுதியிலேயே பெரும்பாலான படப்பிடிப்பை நடத்தி தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார் ரிஷப் ஷெட்டி. இந்த இரண்டாம் பாகமும் பெரும்பாலும் அதே பகுதியில் தான் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் ராணா நடத்தும் டாக் ஷோவில் பங்கேற்ற ரிஷப் ஷெட்டி கூறும்போது, “எனது சொந்த ஊரை ஒரு சினிமா நகரமாக மாற்ற விரும்புகிறேன். அதற்கு கெரடி பிலிம் சிட்டி (கே எப் சி) என்றும் மனதிற்குள் பெயர் வைத்திருக்கிறேன். இந்தப் பகுதியில் பெரிய அளவில் படங்கள் உருவானதில்லை. ஆனால் காந்தாரா இந்த பகுதியை பிரபலப்படுத்தி விட்டது” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!