புஷ்பா - அல்லு அர்ஜுன், சமந்தா அதிரடி ஆட்டம்
டிச 02, 2021
Advertisement
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் "புஷ்பா". இப்படத்தில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா, முதல் முறையாக ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது.
அசத்தலான கிளாமர் ஆடையில் சமந்தாவின் பின்பக்க புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம், “மாஸ் இசையில் தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் தயாராகுங்கள். குயின் சமந்தா, அல்லு அர்ஜுனுடன் இணைந்து இதை கொல்கிறார்,” எனக் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள "புஷ்பா" படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது. இதன் டிரைலர் டிசம்பர் 6ம் தேதி யு டியூபில் வெளியிடப்பட உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!