
கூழாங்கல் - சிங்கப்பூரில் முதலில் வெளியீடு
இன்னும் தியேட்டர்களில் வெளியாகாத இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கு முன்பாக சிங்கப்பூரில் இன்று வெளியிடுகிறார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு முன்பாக சிங்கப்பூரில் வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவுடி பிக்சர்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை இணைந்து ஆரம்பித்துள்ள விக்னேஷ் சிவன், நயன்தாரா "கூழாங்கல்" படத்தை அதன் தயாரிப்பாளர்களிடமிருந்து மொத்தமாக வாங்கினர். அவர்களது முதல் தியேட்டர் வெளியீடு இந்தப் படம் தான். இதற்கடுத்து “ஊர்க்குருவீ, ராக்கி, கனெக்ட்" ஆகிய படங்களை வெளியிட உள்ளார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!