
தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார்
நடிகர் சத்யராஜின் மேலாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் ராமனாதன். இவரது தயாரிப்பில் வாத்தியார் வீட்டுப் பிள்ளை, நடிகன், வள்ளல், திருமதி பழனிச்சாமி, பிரம்மா, உடன்பிறப்பு, வில்லாதி வில்லன் ஆகிய படங்களில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் விஜயகாந்த் நாயகனாக நடிக்க, பாரதிராஜா இயக்கத்தில் தமிழ்ச் செல்வன் படத்தையும் ராமனாதன் தயாரித்துள்ளார். வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவரின் உயிரின் இன்று பிரிந்தது.
ராமனாதனுக்கு பிரமிளா என்ற மனைவியும் காருண்யா, சரண்யா ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் உள்ளதால் அவர்கள் சென்னை வந்ததும் புதன் கிழமையன்று சென்னையில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!