ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன்
செப் 23, 2024
Advertisement
டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தற்போது ஜெயம் ரவி உடன் ‛பிரதர்" படத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கிலும் நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2வது படமாக "பென்ஸ்" என்ற படத்தின் அறிவிப்பு வந்தது.
லோகேஷ் கதையில் உருவாகும் இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கின்றார். தற்போது இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!