‛96 இரண்டாம் பாகத்தில் பிரதீப் ரங்கநாதனா : பிரேம் குமார் மறுப்பு
ஜூன் 01, 2025
Advertisement
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛96". இந்த படத்திற்கு பின் கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் ‛மெய்யழகன்" படத்தை இயக்கினார். இந்த படமும் வரவேற்பை பெற்றது. பிரேம் குமார் அடுத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதில் பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஆனால் இதனை பிரேம் குமார் மறுத்துள்ளார். இதுபற்றி இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட பதிவில், "96 இரண்டாம் பாகத்தை உருவாக்கினால் கண்டிப்பாக முதல் பாகம் குழுவை வைத்து தான் உருவாக்குவேன். அதேசமயத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் வேறு ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தையை நடத்தினேன். அது 96 இரண்டாம் பாகம் இல்லை" என பதிவிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!