
பத்து தல இயக்குனரின் அடுத்தபடம்
மே 31, 2024
Advertisement
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களைக் இயக்கியவர் ஓபிலி என்.கிருஷ்ணா . கடந்தாண்டு நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய "பத்து தல" என்கிற படம் வெளியானது. கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். மற்ற விபரம் எதுவும் வெளியாகவில்லை. இது ஒரு காதல் கதையில் தயாராவதாக சொல்கிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!