
இந்தியன் தாத்தாவின் கத்தியே அழைப்பிதழ் ஆனது
படத்தின் இரு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை (ஜூன் 1) மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடக்கிறது. இதில் ரஜினி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவர் இமயமலை சென்று விட்டதால் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகி உள்ளது. என்றாலும் மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, சிவராஜ் குமார், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாடல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தியன் தாத்தா சேனாதிபதி பயன்படுத்தும் கத்தியின் சாயலில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. விழாவிலும் இதுபோன்ற எதிர்பாராத ஆச்சர்யங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கமல் இந்தியன் தாத்தா வேடத்தில் தோன்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!