
சூர்யாவை இயக்கும் ராம் சரண் பட இயக்குனர்!
அக் 21, 2026
Advertisement
"கருப்பு" மற்றும் "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படங்களின் மூலம் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றதைத் தொடர்ந்து, "சீன்" படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளார் சூர்யா. ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லேன், ஆனந்தராஜ், லால், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தை 2டி எண்டர்டைன்மென்ட், ழகரம் ஸ்டுடியோ தயாரிக்கின்றன.
இந்நிலையில், ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" என்ற படத்தில் நடித்த சூர்யா, அடுத்து ராம் சரண் நடித்த "பெத்தி" படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனாவுடன் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் புச்சி பாபு சனா, சிரஞ்சீவியிடம் ஒரு கதையைக் கூறியதாகவும், அந்தத் திட்டம் தாமதமானால், சூர்யா நடிக்கும் படத்தை இயக்கத் தற்போது திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!