ஷங்கரின் கேம் சேஞ்சர் ரிலீஸ் பற்றி புதிய தகவல்
பிப் 28, 2024
Advertisement
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் "கேம் சேஞ்சர்". இப்படம் கடந்த சில வருடங்களாகவே தயாரிப்பில் உள்ளது. இந்தப் படத்துடன் "இந்தியன் 2" படத்தின் படப்பிடிப்பையும் ஷங்கர் நடத்தியதால் இரண்டு படங்களின் வேலைகளும் தாமதமாகி ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது.
இந்த வருடமாவது இந்தப் படம் வெளியாகுமா என்று ராம் சரண் ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தார்கள். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த வருட கிறிஸ்துமஸ் தினத்தில் படத்தை வெளியிட உள்ளதாகச் சொல்கிறார்கள். இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
அடுத்த மாதம் ராம்சரணின் பிறந்தநாள் வர உள்ளது. அன்றைய தினத்தில் பட வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளார்களாம். "ஆர்ஆர்ஆர்" படத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியில் வெளியாக உள்ள ராம் சரண் படம் இது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!