
தென்றலாய் கரைந்த தேனிசை: அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம்!
இசையமைப்பாளர் தேவா நேற்று (அக்.,17) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 75. அவரது உடல் சென்னை, திநகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் அங்கிருந்து தேவாவின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேவாவிற்கு சொந்தமான இடத்தில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. தொடர்ந்து 7 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட முழு தேக்கால் ஆன சவப்பெட்டியில் வைத்து 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் அமைச்சர் காந்திராஜ், மாவட்ட கலெக்டர் பிரியா, போலீஸ் எஸ்.பி., சிபின் ஆகியோர் பங்கேற்று தமிழக அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!