
மே மாதத்தில் வெளியாகும் ஜெயம் ரவி படம்
பிப் 28, 2024
Advertisement
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன், இறைவன் ஆகிய படங்கள் ஏமாற்றத்தை தந்தாலும் சைரன் படம் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. தற்போது ஜெயம் ரவியின் 33வது படமான "காதலிக்க நேரமில்லை" படத்தை அமைச்சர் உதயநிதியின் மனைவி மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். முழு நீள காதல் படமாக உருவாகும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. விரைவில் மொத்த படப்பிடிப்பை முடித்து மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர ஜெயம் ரவி நடித்துள்ள மற்றொரு படமான ‛பிரதர்" விரைவில் ரிலீஸாக உள்ளது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!