நெஞ்சுக்கு நீதி தமிழகத்தில் ரூ.12 கோடி வசூல்
ஜூன் 06, 2022
Advertisement
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் "நெஞ்சுக்கு நீதி". ஹிந்தியில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற "ஆர்ட்டிக்கிள் 15" படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப் படம். உதயநிதி நடிக்கும் படம் என்றாலே கலகலப்பான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் ஒரு சீரியசான படத்தில் அவர் நடித்தது எதிர்பாராத ஒன்றாக இருந்தது. இருப்பினும் "ஆர்ட்டிக்கிள் 15" படத்தை தமிழுக்குப் பொருத்தமான காட்சிகளை அமைத்து இங்குள்ள ரசிகர்களையும் ரசிக்க வைத்துவிட்டார்கள்.
இப்படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு நிகழ்வில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இளவரசு படத்தின் வசூல் பற்றிய தகவலை வெளியிட்டார். 12 கோடி ரூபாயை மொத்தமாக வசூலித்து 6 கோடி ரூபாயை ஷேர் ஆக பெற்றுத் தந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது இந்தப் படம் என்றார்.
உதயநிதி நடிப்பில் அடுத்து "கண்களை நம்பாதே", மகிழ்திருமேனி இயக்கி வரும் படம், "மாமன்னன்" ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!