சிறந்த பின்னணி பாடகி விருது : பெருமிதம் தெரிவித்த நஞ்சியம்மா
ஜூலை 23, 2022
Advertisement
பாலக்காடு : ""திரைப்பட பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி"" என, விருது பெற்ற நஞ்சியம்மா பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த 2020ம் ஆண்டுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், மலையாளத்தில் வெளிவந்த "அய்யப்பனும் கோஷியும்" பட இயக்குனர் சாச்சிக்கும், சிறந்த துணை நடிகராக, அதில் நடித்த பிஜூ மேனனுக்கும், பின்னணி பாடகி விருது நஞ்சியம்மாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், அப்படத்தில் பாடிய "கலக்காத்த சந்தனமேரி வெகுவூக பூத்திருக்கு" என்ற பாடல் மிகப்பிரபலம். இதுகுறித்து, நஞ்சியம்மா கூறுகையில், ""என் மனதை தொட்ட பாடல் இது. இதை நானே எழுதி பாடினேன். இசை ரசிகர்கள் எல்லோர் மனதிலும் இப்பாடல் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…