பாசிட்டிவ்வாக பறந்து போன மார்ச் : ஐஸ்வர்யா ரஜினி பதிவு
ஏப் 02, 2024
Advertisement
நடிகர் ரஜினிகாந்தை போலவே அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியும் தீவிரமான ஆன்மீகவாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். கடைசியாக இவர் இயக்கிய லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை திருவண்ணாமலையில் தொடங்கியவர் இறுதிக்கட்டப் படப்பிடிப்பையும் அங்கு தான் நடத்தி முடித்தார். அதோடு, திருவண்ணாமலை, காஞ்சி காமாட்சி அம்மன், காசி உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கும் தொடர்ந்து ஆன்மீக பயணம் சென்று வந்த ஐஸ்வர்யா ரஜினி, அது குறித்த புகைப்படங்களையும் எனது சோசியல் மீடியாவில் வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது ஓம் நமச்சிவாயா என்று பேப்பரில் பலமுறை எழுதிய புகைப்படத்தை அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். அதோடு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் இன்னும் சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதோடு, ‛மார்ச் மாதம் முழுவதும் பாசிட்டிவ்வாக மட்டுமே பறந்து போனது" என குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!