ரூ.100 கோடி வசூலித்த மாளிகப்புரம்
பிப் 02, 2023
Advertisement
விஷ்ணு சசிசங்கர் இயக்கத்தில், உன்னி முகுந்தன், பேபி தேவநந்தா மற்றும் பலர் நடித்து டிசம்பர் 30ம் தேதி வெளிவந்த மலையாளப் படம் "மாளிகப்புரம்". சபரிமலைக்குச் செல்ல ஆசைப்படும் ஒரு சிறுமி, தனது தோழன் ஒருவனுடன் சபரிமலை செல்வதுதான் இப்படத்தின் கதை.
கேரளாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தற்போது 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. மலையாளத்தில் 100 கோடி வசூலைக் கடக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன்பு மோகன்லால் நடித்த "புலிமுருகன், லூசிபர்" ஆகிய படங்கள்தான் 100 கோடி வசூலைக் கடந்திருந்தது.
"மாளிகப்புரம்" 100 கோடி வசூலைக் கடந்தது குறித்து அப்படத்தின் கதாநாயகன் உன்னி முகுந்தன், “அனைவருக்கும் நன்றி, மகிழ்ச்சி, பெருமை…எங்களது படத்திற்கு ஆதரவும் அன்பும் தந்த அனைத்து குடும்ப ரசிகர்கள், குழந்தைகள் அனைவருக்கும் மிக்க நன்றி. "மாளிகப்புரம்" குழுவிற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்தகள்,” எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!