
மகாநடி வசூலை முறியடிக்குமா மா இன்ட்டி பங்காரம்
பல வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில வருடங்களாகத்தான் மீண்டும் ஹீரோயின்கள் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களும் வரவேற்பை பெறுகின்றன. தெலுங்கில் இதற்கு முன்பு கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த "மகாநடி" படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அப்படம் அமெரிக்காவில் அதிக வசூலைக் குவித்த ஹீரோயின்களின் தெலுங்குப் படமாக அமைந்தது. அப்படம் 2.6 மில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு சமந்தா நடித்து வெளிவந்த "மா இன்ட்டி பங்காரம்" படம் தற்போது 2 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. அப்படம் விரைவில் "மகாநடி" படத்தின் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் 92 கோடி வசூலைக் கடந்து 100 கோடி வசூலை நோக்கி இப்படம் போய்க் கொண்டிருக்கிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!