
அயோத்தியில் நாளை தொடங்கும் அர்ஜூன் படம்
அயோத்தி ராமஜென்ம பூமி ஆலயத்தில் இந்த படம் தொடங்கப்படுகிறது. அங்கே படம் குறித்த செய்திகள், தலைப்பு அறிவிக்கப்பட உள்ளது. இதனால், இது ராமர், ராமாயணம் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேசப்பற்று, வீரம், தியாகம் மற்றும் இந்தியாவின் பெருமையைப் போற்றும் வகையில் இந்த படம் இருக்கும் என்பதால், அந்த கதைக்குள் தேசப்பற்று கதையும் இருக்கும் என கூறப்படுகிறது.
படக்குழு கூறுகையில் ""சிறப்புமிக்க இந்த நிகழ்வில் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள். பாலிவுட் மற்றும் பல்வேறு பிராந்தியத் திரைப்படத் துறைகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் இப்படத்தில் இணைய உள்ளனர். இந்தியத் திரையுலகின் பல முக்கியமான நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படமாக இது உருவாகவுள்ளது. தேசத்தின் பெருமையை உலகத் திரையுலகிற்கு எடுத்துச் செல்லும் ஒரு பிரம்மாண்டமான திரைப்படப் பயணம் அயோத்தியில் தொடங்குகிறது"" என்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…