பெண் இயக்குநர்களை பிரித்து பார்க்காதீர்கள் : பவ்யா திரிகா வேண்டுகோள்
நவ 26, 2026
Advertisement
"கதிர்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பவ்யா திரிகா. அதன்பிறகு ஜோ, இடி மின்னல் காதல், பன் பட்டர் ஜாம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் நாளை வெளியாகும் படம் "சிக்னல் அட் 11.30". இதில் அவர் மனநல மருத்துராக நடித்திருக்கிறார். மலர்விழி நடேசன் என்கிற பெண் இயக்குனர் இயக்கி, தயாரித்துள்ளார்.
படத்தில் நடித்திருப்பது பற்ற பவ்யா கூறும்போது” மலர்விழியகவ் கதை சொல்லும் விதமும், படத்தின் மீதான அவரது பார்வையும்தான் முதலில் என்னை இந்தப் படத்துடன் இணைத்தது. பெண் இயக்குநருடன் பணிபுரிய போகிறோம் என்பதும், "சிக்னல் அட் 11.30" படத்தின் கதைக்களமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
பெண் இயக்குநர்கள் அதிக அளவில் திரைப்படங்களை இயக்க வேண்டும். ஒரு படத்தைப் பற்றிய விவாதம் நடக்கும்போது, அதை இயக்கியவர் பெண் என்பதைக் கடந்து, அவரது படைப்பைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். பெண் இயக்குநர் என்று தனித்து அடையாளப்படுத்தக்கூடாது. பிரித்து பார்க்கவும் கூடாது என்று நினைக்கிறேன்.
என்னுடைய முதல் படத்திலேயே சந்தோஷ் பிரதாப்புடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். மீண்டும் அவருடன் இந்தப் படத்தில் இணைந்தது மகிழ்ச்சி அளித்தது. புஜிதாவும் மிகவும் இனிமையானவர். ஏற்கெனவே அறிமுகமானவர்களுடன் இணைந்து பணியாற்றியது போன்ற உணர்வு படப்பிடிப்புத் தளத்தில் இருந்ததால், அனைவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டது. அந்த நேர்மறையான சூழல் படப்பிடிப்பு முழுவதும் தொடர்ந்தது” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…