
வாத்தி இயக்குனரின் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ்
திருமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து, திருமண புகைப்படங்களை நடிகர் நிதின், நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள். கீர்த்தி சுரேஷ் வண்ணமயமான ஆடையுடன் திருமணத்தில் கலந்து கொண்டார்.
2007ல் வெளிவந்த "நாபகம்" படம் மூலம் நடிகராக திரையுலகத்திற்கு அறிமுகமானவர் வெங்கி. 2010ல் வெளிவந்த "சினேகா கீதம்", 2011ல் வெளிவந்த "இட்ஸ் மை லவ் ஸ்டோரி" படங்களுக்கு வசனம் எழுதினார். 2018ல் வெளிவந்த "தொலி பிரேமா" படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து “மிஸ்டர் மிஞ்சு, ரங் தே” படங்களை இயக்கினார். தற்போது தனுஷ் நடிக்க தமிழ், தெலுங்கில் "வாத்தி" படத்தை இயக்கி முடித்துள்ளார்.
"வாத்தி" படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிப்ரவரி 4ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!