
பிளாஷ்பேக்: தமிழில் தடுமாறிய ஆர்.டி பர்மன்
1960 முதல் 1990 வரை பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்த இசையமைப்பாளர் ஆர். டி பர்மன். அவரது இசைக்காகவே பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுகளை வென்றவர். ஹிந்தி மொழி தவிர மற்ற மொழிகளில் அவர் இசை அமைத்தது மிகவும் குறைவு. தமிழ் மொழியில் "பூ மழை பொழியுது" (1987). விஜயகாந்த் மற்றும் நதியா நடித்த இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களுக்கும் ஆர்.டி.பர்மன் இசையமைத்தார். "உலகம் பிறந்தது எனக்காக" (1990). சத்யராஜ் நடித்த இப்படத்தின் பாடல்களுக்கு ஆர்.டி.பர்மன் இசையமைத்திருந்தார். இந்த இரண்டு படங்களின் பாடல்கள் ஹிட் ஆகவில்லை.
ஆனால் இவரது இந்தி பாடல்கள் சில தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. தான் இசையமைத்த இரண்டு படங்களுமே தமிழில் ஹிட் ஆகவில்லை என்பதால் அதன் பிறகு தமிழில் அவர் இசையமைக்கவில்லை.



















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்சரியான உளறல் கட்டுரை. பூ மழை பொழியுது பாடல்கள் அனைத்தும் ஹிட். இப்போது கூட அவ்வப்போது வானொலியில் இந்தப் பாடல்களை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.