ஆர்ஆர்ஆர் : தமிழில் வெளியிடும் லைகா
பிப் 17, 2021
Advertisement
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றியை ருசித்தவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அதனாலேயே தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து, அவர் இயக்கிவரும் ஆர்ஆர்ஆர்" படத்திற்கு தெலுங்கு தவிர மற்ற மொழிகளிலும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப்படம் வரும் அக்-13ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில் இதன் மற்ற மொழி வெளியீட்டு உரிமைகளுக்கான வியாபாரம் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தமிழில் இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் சுமார் 42 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் பப்ளிசிட்டி மற்றும் இதர செலவுகளை கணக்கிட்டால் சுமார் 50 கோடியை இந்தப்படத்திற்காக இறக்குகிறதாம் லைகா நிறுவனம், அதேசமயம், இந்த சூழலில், படத்தின் வசூலில் தனது 50 கோடி அசலுடன் லாபத்தையும் பார்க்கவேண்டிய ரிஸ்க் லைகாவுக்கு இருக்கிறது என்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!